17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை.. சென்னை செல்ல வேண்டிய 3 விமானங்கள் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து..

மதுரை.. சென்னை செல்ல வேண்டிய 3 விமானங்கள் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து..

எழுதியவர்: ஆசிரியர் October 19, 2023, 10:29 pm

மதுரையில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானங்கள் இரண்டும் ஸ்பைஸ் ஜெட் விமானம்  மொத்தம் மூன்று விமானங்களும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ,மும்பை, டெல்லி, கோவா என உள்நாட்டு விமான சேவைகள் நடந்து வருகிறது.  இதே போல் இலங்கை சிங்கப்பூர் துபாய் ஆக வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடந்து வருகிறது. 

இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் மற்றும் மதுரைக்கு செல்ல வேண்டிய ஸ்பைஸ்  விமானம் மற்றும் இரவு விமானமும் தடைபட்டதால் மொத்தம் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

அடுத்தடுத்து  மதுரையில் இருந்து சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமானத்தில் செல்ல பதிவு செய்த பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!