17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் கல்லூரி மாணவிகளுக்கான கற்சிலை பாதுகாப்பு பயிலரங்கம்..

நெல்லையில் கல்லூரி மாணவிகளுக்கான கற்சிலை பாதுகாப்பு பயிலரங்கம்..

எழுதியவர்: ஆசிரியர் October 19, 2023, 11:13 am

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தினை சார்ந்த தூய மரியன்னை கல்லூரி வரலாற்று துறை மாணவிகளுக்கு கற்சிலை பாதுகாப்பு பயிலரங்கம் நடத்தப்பட்டது. முதலாவதாக மாணவிகளுக்கு அருங்காட்சியகம் முழுவதும் சுற்றி காட்டப்பட்டு அருங்காட்சியகம் பற்றிய வரலாற்று தகவல்கள் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து தமிழக சிற்பக்கலையின் சிறப்புகள் என்கிற தலைப்பில் மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் தமிழகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழக சிற்பக்கலை அடைந்த பரிணாம வளர்ச்சி பற்றி விரிவான விளக்கப் படமுடன் விவரித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற செய்முறை விளக்க பயிற்சியில் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பங்களை பற்றிய சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. மேலும் அச்சிலைகளை பாதுகாக்கும் முறை பற்றிய செய்முறை விளக்கம் பயிற்சி காப்பாட்சியரால் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது. மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிலைகளை சுத்தப்படுத்தினர். இப்பயிலரங்கத்தில் தூய மரியன்னை கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் அனுஜா, ஜீசஸ் நிலாந்தி நதிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!