18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழித்திட நடவடிக்கை; புதிய எஸ்.பி உறுதி..

தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழித்திட நடவடிக்கை; புதிய எஸ்.பி உறுதி..

எழுதியவர்: ஆசிரியர் October 19, 2023, 10:42 am

தென்காசி மாவட்டத்தில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழித்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் 4-வது புதிய காவல் கண்காணிப்பாளராக டி.பி.சுரேஷ் குமார் 18.10.2023 புதன் கிழமையன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தென்காசி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா குறித்து தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு, பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் பழக்கத்தை தடுக்கும் விதமாக விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படும். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!