18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் முன்பகை  காரணமாக விவசாயிக்கு அரிவாள் வெட்டு சேத்தூர் போலீசார் விசாரணை..

இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் முன்பகை  காரணமாக விவசாயிக்கு அரிவாள் வெட்டு சேத்தூர் போலீசார் விசாரணை..

எழுதியவர்: ஆசிரியர் October 18, 2023, 10:49 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள  சாஸ்தா கோவில் பகுதியில்  சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை  சேர்ந்தவர் செல்லத்துரை மற்றும் முத்துமணி இருவரும் விவசாயம்  வேலைக்காக  சென்றுள்ளனர்  இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்பகை இருந்து இருந்துள்ளது.

இந்த நிலையில் இருவரும் விவசாய வேலைகளை முடிந்து விட்டு இருவரும் சக நண்பருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு உணவு அருந்திக் கொண்டிருந்த போது முத்துமணிக்கும் செல்லத்துரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த முத்துமணி  அறிவாளால்  செல்லத்துரை      வலது கையில் வெட்டியுள்ளார் .

வலது கை வெட்டுப்பட்டு தொங்கிய நிலையில்   செல்லத்துரை இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளித்த பின்பு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்   இந்த சம்பவம் குறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தப்பி ஓடிய முத்துமணியை போலீசார் தேடி வருகின்றனர்…

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!