17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் October 18, 2023, 10:47 pm

ராஜபாளையம்,அக்.18:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  சிஐடியு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வாகா சாலை வரியை தமிழக அரசு கைவிட கோரியும், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில்  சிஐடியு டாக்ஸி செயலாளர் கண்ணன் , நகரக் கன்வினர் சுப்பிரமணியம் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்; ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!