18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி விநியோகம்..

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் October 17, 2023, 10:20 am

இராமநாதபுரம், அக்.17-

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு  பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி முன்னிலை வகித்தனர். , மாணவர் 510 பேர், மாணவியர் 592 பேருக்கு ரூ.48.28 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ராஜகண்ணப்பன் வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாக்யலட்சுமி, பேரையூர் ஊராட்சி தலைவர் ரூபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!