18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே ரூ.5.5 கோடியில் புதிய தடுப்பணை – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்..

ராமநாதபுரம் அருகே ரூ.5.5 கோடியில் புதிய தடுப்பணை – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்..

எழுதியவர்: ஆசிரியர் October 17, 2023, 10:18 am

ராமநாதபுரம், அக்.17- ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22,65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், புத்தேந்தல் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் போல், மாவட்டத்தில் 13 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சாலை பணிகள் கண்மாய்கள் மராமத்து போன்ற எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எம்எல்ஏ கோரிக்கை படி இப்பகுதியில் ரூ.5.5 கோடி மதிப்பில தடுப்பணை கட்டித்த பொதுப்பணித்துறை அமைச்சர் மூலம வரும் நிதி ஆண்டில நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், புத்தேந்தல் ஊராட்சி தலைவர் கோபிநாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை, சேவுகபெருமாள், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், சாயல்குடி ஒன்றிய கிழக்கு திமுக செயலர் குலாம் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!