17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மகளிர் கல்லூரியில் காதி, கிராமத் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்..

மகளிர் கல்லூரியில் காதி, கிராமத் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் October 13, 2023, 10:01 pm

இராமநாதபுரம், அக்.13- இராமநாதபுரம் முஹமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் காதி, கிராமத் தொழில்களுக்கான தொழில்முனைவோர் வளர்ச்சி விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் மீரா தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ராதிகா வரவேற்றார். கதர், கிராமத் தொழில்கள் ஆணைய உதவி இயக்குநர் அறம் வளர்த்தான் சிறப்புரையாற்றினார்.

தொழில்முனைவோர் மேம்பாடு குறித்து பிரதம மந்திரி தொழில் முனைவோர் வளர்ச்சி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலிபூர் ரஹ்மான் பேசினார். காந்திய போதனைகள், கதர் ஆடைகளின் முக்கியத்துவம் காந்தியம் சார்ந்த கருத்துகள் பகிரப்பட்டன. இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கணினி அறிவியல் துறை பேராசிரியை ஜனனி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!