17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்து எஸ் டி பி ஐ , சார்பாக ஆர்ப்பாட்டம்..

பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்து எஸ் டி பி ஐ , சார்பாக ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் October 12, 2023, 12:04 am

பாலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அராஜக தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பை கண்டித்தும், பாலஸ்தீன் நாட்டுக்கு இந்தியாவின் ஆதரவை இந்தியா தொடர வேண்டும் என வலியுறுத்தியும் எஸ் டி பி ஐ , சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாலஸ்தீன் நாட்டை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்யும் சியோனிச இஸ்ரேலின் நடவடிக்கையை ஐ.நாவும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் இன்று (அக்.11)  கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்றன.

மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் நஜ்மா பேகம் கண்டன உரை நிகழ்த்தினர். துணை தலைவர் ஜாபர் சுல்தான், பொதுச்செயலாளர் பகுர்தீன், தொகுதி தலைவர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட  கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இஸ்ரேலின் அடாவடியை கண்டித்தும், பாலஸ்தீனர்களின் மண்ணைக் காக்கும் போராட்டத்தை ஆதரித்தும் கோஷம் எழுப்பினர். இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!