18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நயினார் கோவில் அருகே 67 பேருக்கு ரூ.3.98 லட்சம் நலத்திட்ட உதவி..

நயினார் கோவில் அருகே 67 பேருக்கு ரூ.3.98 லட்சம் நலத்திட்ட உதவி..

எழுதியவர்: ஆசிரியர் October 11, 2023, 11:29 pm

இராமநாதபுரம், அக்.11- இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே அ.பனையூர் ஊராட்சியில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அ.பனையூர் ஊராட்சி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 144 மனுக்களில் 67 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இன்றைய முகாமில் பெறப்பட்ட 96 மனுக்கள், ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் 3 பேருக்கு  பட்டா மாறுதல் நத்தம்,  12 பேருக்கு  பட்டா மாறுதல் முழுப்புலம்,  3 பேருக்கு பட்டா மாறுதல் உட்பிரிவு, 4 பேருக்கு இலவச வீட்டு மனை ஒப்படைப்பு, 14 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 3 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வேளாண் துறை சார்பில் 7 பேர், தோட்டக்கலைத்துறை மூலம் 3 பேர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பேருக்கு தையல் இயந்திரம், 2 பேருக்கு விலையில்லா சலவைப் பெட்டி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 4 பேருக்கு விலையில்லா சலவைப் பெட்டி என 67 பயனாளிகளுக்கு ரூ.3.97லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் நாராயணன், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வினிதா, பரமக்குடி வட்டாட்சியர் ரவி, நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, அ.பனையூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!