17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அருகே கொம்பூதி கிராம மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு..

கீழக்கரை அருகே கொம்பூதி கிராம மக்களிடம் கலெக்டர் குறை கேட்பு..

எழுதியவர்: ஆசிரியர் October 9, 2023, 10:01 pm

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் கொம்பூதி கிராமத்தில் மக்களிடம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் குறைகள் கேட்டறிந்தார். அரசின்  பல்வேறு துறை நலத்திட்ட உதவிகளை தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். கிராமப் பகுதிகளில் பிள்ளைகள் +2 வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடாமல் பிள்ளைகளை பட்டமேற்படிப்பு வரை படிக்க பெற்றோர் வைக்க வேண்டும். அரசு தொழிற்பயிர்ச்சியுடன் வேலைவாய்ப்புகளையும் தனியார் துறைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பணி போட்டிதேர்வுகளுக்கு வழங்கும் பயிற்சி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரேஷன் பொருட்கள், குடிநீர் விநியோகம் குறித்து கேட்டறிந்தார்.

ஊராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறினார்,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!