18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி போலீசார் – விவசாயிகள் தள்ளுமுள்ளு – பரபரப்பு..

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி போலீசார் – விவசாயிகள் தள்ளுமுள்ளு – பரபரப்பு..

எழுதியவர்: ஆசிரியர் October 9, 2023, 9:48 pm

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், போகலூர் வட்டாரத்தில் பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2021-22, 2022-23 நிதி ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கவில்லை. இத்தொகையை வழங்கக்கோரி பல்வேறு விவசாய சங்கங்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று கூடினர். தடுப்பு வேலிகளை தாண்டி கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர் அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகளை கூட்டத்தை சமாளிக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!