17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரேஷன் பாமாயில் 400 பாக்கெட் பறிமுதல்: முருக்கு மாஸ்டர் கைது..

ரேஷன் பாமாயில் 400 பாக்கெட் பறிமுதல்: முருக்கு மாஸ்டர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் October 7, 2023, 6:13 pm

இராமநாதபுரம், அக்.7- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு முருக்கு கம்பெனியில் ரேஷன் பாமாயில் பாக்கெட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதன்படி  ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சார்பு ஆய்வாளர் சிவஞானபாண்டியன் தலைமையில் தலைமை காவலர்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் முருக்கு கம்பெனியை சோதனையிட்டனர்.

அங்கு பதுக்கியருந்த தலா 1 லிட்டர் வீதம் 400 லிட்டர் ரேஷன் பாமாயில் பாக்கெட்களை கைப்பற்றினர். இது தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் அருகே மதன்குடியைச் சேர்ந்த முருக்கு மாஸ்டர் மகேஸ்வரன்.(38) கைது செய்து, முருக்கு கம்பெனி உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!