18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம்,  பரமக்குடியில் தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

இராமநாதபுரம்,  பரமக்குடியில் தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

எழுதியவர்: ஆசிரியர் October 7, 2023, 6:08 pm

இராமநாதபுரம், அக்.7- இராமநாதபுரம் மாவட்டம் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  பரமக்குடியில் நடந்தது. தமுமுக மாநில துணை பொது செயலர் எஸ்.சலீமுல்லா கான் தலைமை வகித்தார். சங்பரிவார அமைப்புகளில் அதிகாரம் அநீதியை கண்டித்து அக்.28 ல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கருப்பு சட்டை அணிந்து ஆயிரம் பேர் பங்கேற்றல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர்கள் இப்ராஹிம் (மத்தி), ஷேக் அப்துல்லாஹ் (மேற்கு) வாவா ராவுத்தர் (தெற்கு), தமுமுக மாவட்ட செயலாளர்கள் சிந்தா ஷேக் மதரர் (மேற்கு), அப்துல் ரஹீம் (மத்தி), சம்சுகனி (தெற்கு),மமக மாவட்ட செயலாளர்கள் முஹமது இலியாஸ் (மேற்கு), ஆஷிக் அஹமத் (மத்தி), மாவட்ட பொருளாளர்கள் சையது அபுதாஹிர் (மேற்கு), சபீக் ரஹ்மான் (மத்தி), சாகுல் ஹமீது (தெற்கு) உட்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வாகித்தார்.  மாநில தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட், மாநில செயற்குழு உறுப்பினர் முஹமது முஹிதுல்லா பேசினர். கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி அக்.28ல் சென்னையில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!