18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்..

சோழவந்தான் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் October 7, 2023, 12:36 am

சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

இம் முகாமிற்கு, தொழிலாளர் அணி தலைமைச் செயலாளர் முத்தீஸ்வரன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். தமிழ் முருகன் வரவேற்றார். சோழவந்தான் நகர பொறுப்பாளர் சங்கர்,தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் கார்த்திகேயன், மாணவர் பாசறை செயலாளர் குணசேகர பாண்டியன் கண்ணுடையாள்புரம் பொறுப்பாளர் அபிநாத் உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முகாமில், 50 கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!