18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏழு வருடங்களுக்குப் பிறகு மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா;15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு…

ஏழு வருடங்களுக்குப் பிறகு மதுரை விளாச்சேரி பகுதியில் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா;15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு…

எழுதியவர்: ஆசிரியர் October 4, 2023, 11:51 pm

மதுரை திருநகர் உள்ள விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது.விளாச்சேரி பகுதியில் ஸ்ரீ அழகு நாச்சியார் அம்மன் மற்றும் அய்யனார் கோவில் மிகவும் விசேஷமான ஒன்று. இந்தக் கோவிலின் 34 ஆம் ஆண்டு குதிரை எடுப்பு மற்றும் புரட்டாசி பொங்கல் விழா இன்று நடைபெற்றது.

இத்திருவிழாவில் விளாச்சேரி சுற்றியுள்ள  கிராமத்தில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்  வேண்டி குதிரை எடுத்தனர். சாமி குதிரையின் முன்னர் முதியவர்கள் இளம் பெண்கள், ஆண்கள் ஆட்டம் ஆடி 15க்கும் மேற்பட்ட குதிரைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!