17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே  அம்மன் கோயில் 19 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா..

இராமநாதபுரம் அருகே  அம்மன் கோயில் 19 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா..

எழுதியவர்: ஆசிரியர் October 4, 2023, 7:45 pm

இராமநாதபுரம், அக்.4- இராமநாதபுரம் அருகே தியாகவன்சேரி முத்துமாரிஅம்மன் கோயில் 19-ஆம் ஆண்டு முளைப்பாரி விழா செப்.26 ல் காப்பு கட்டுடன் தொடங்கியது. இதையொட்டி ஆடவர் ஒயிலாட்டம், மகளிர் கும்மியாட்டம் தினமும் இரவு நடந்தது. ஊருணி கரையில் அம்மன் கரகம் நேற்றிரவு புறப்பட்டு மேள தாளம், தப்பாட்டம், வாண வேடிக்கை வானில் வர்ண ஜாலம் காட்ட ஊர்வலமாக கோயில் வந்தடைந்தது. அங்கு தீபாராதனை காட்டப்பட்டது. இன்று காலை அம்மன் கரகம்பக்தர்களின் தரிசனத்திற்காக வீதி உலா சென்றது. இதை தொடர்ந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மாலை 5 மணியளவில் ஒயிலாட்டத்திற்கு பிறகு அம்மன் கரகம் முன் செல்ல முளைப்பாரி சுமந்து பெண்கள் ஊர்வலம் சென்றனர். தியாகவன்சேரி கிராம மக்கள், முத்துமாரியம்மன் ஆலய வஸ்தாவிகள் மாப்பிள்ளைசாமி, சாத்தையா மற்றும் ரவி, தர்மலிங்கம் உள்ளிட்ட விழாக்குழுவினர், விழா ஏற்பாடுகளைசெய்தனர். அக்.10 ஆம் தேதி குளுமை பொங்கல் விழா நடைபெற உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!