18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு.

தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு.

எழுதியவர்: ஆசிரியர் October 4, 2023, 6:59 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக குட்பட்ட இ.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்ஷினி என்பவர் அதே ஊரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.இவர் ஐதராபாத் மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க போட்டியானது ஸ்கூல் கேம்ஸ் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் பவுண்டேசன் சார்பில் தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா,ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து பங்கு பெற்றனர்.,

இதில் தமிழகத்திலிருந்து பங்கேற்று 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் வென்று முதலிடம் பெற்றார்.,

இந்நிலையில் இன்று சொந்த ஊருக்கு வந்த இந்த தர்ஷினி என்ற மாணவிக்கு தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா தலைமையிலான கிராம மக்கள் மேள தாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.மேலும் தங்க பதக்கம் வென்ற மாணவியை ஊர்வலமாக அரசு பள்ளிக்கு அழைத்து வந்த நிலையில் அரசு பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!