18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய கேரம் போட்டி தங்கம் வென்ற மாணவி, வெள்ளி வென்ற மாணவர்

தேசிய கேரம் போட்டி தங்கம் வென்ற மாணவி, வெள்ளி வென்ற மாணவர்

எழுதியவர்: ஆசிரியர் October 4, 2023, 6:57 pm

இராமநாதபுரம், அக்.4- பெங்களூருவில் நடந்த தேசிய அளவி லான கேரம் போட்டியில், ராமநாதபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி தங்கம், மாணவர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

பெங்களூருவில் மத்திய கல்வி வாரியம் சார்பில் செப்.30 முதல் அக். 2 வரை பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான கேரம் போட்டி நடந்தது. தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ஐசிஎஸ்இ., பள்ளி 9ம் வகுப்பு மாணவி த.ஜெயஸ்ரீ, பத்தாம் வகுப்பு மாணவர்  போ.துஹின் அஸ்வந்த் ஆகியோர் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டனர்.

மகளிர் பிரிவில் ஜெயஸ்ரீ முதலிடம் பிடித்து தங்கம், ஆடவர் பிரிவில் துஹின் அஸ்வந்த் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர். பதக்கம் வென்ற ஜெயஸ்ரீ, துஹின் அஸ்வந்தை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!