17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் குப்பை கிடங்கை அகற்றக்கோரி 1000கும் மேற்பட்டோர் சாலை மறியல்..

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் குப்பை கிடங்கை அகற்றக்கோரி 1000கும் மேற்பட்டோர் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் October 3, 2023, 10:08 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிப் பகுதியில் சேரும் குப்பைகளை சேகரிப்பதற்காக உத்தப்பநாயக்கனூர் அருகே உ.வாடிப்பட்டி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது.

இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை எனத்தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டன.நாளடைவில் அனைத்து குப்பைகளும் தரம் பிரிக்கப்படமால் தீயிட்டு எரிக்கப்பட்டன.இத்தீயினால் ஏற்படும் புகையினால் உத்தப்பநாயக்கனூர். – வாடிப்பட்டி பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர்.இதனால் குப்பைகிடங்கில் குப்பை கொட்ட விடாமல் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் குப்பை கொட்ட எதிர்ப்புத் தெரிவித்தும் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வலியுறுத்தியும் பொதுமக்கள் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உத்தப்பநாயக்கனூரல் உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில்; அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.சம்பவமறிந்த போலிசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!