17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிடுக..

முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு: வெள்ளை அறிக்கை வெளியிடுக..

எழுதியவர்: ஆசிரியர் October 3, 2023, 10:05 pm

இராமநாதபுரம், அக்.2- 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் இக்ரஃ மூன்று மாத செயல்திட்ட பணிகளை வீரியபடுத்தும் வகையில் செயல்வீரர்கள், செயல்வீராங்கனைகள் கூட்டம் நடந்தது.  மாவட்டத்தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை வகித்தார் . மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணை செயலாளர்கள் உஸ்மான், சீனி ரஜப்தீன், மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம்  செயல்திட்டங்களை தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலாளர் தினாஜ் கான் நன்றி கூறினார். வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க அக். 1 முதல் டிச .31 வரை விழிப்புணர்வு பிரசாரம்,  பாஜக எம்பி ரமேஷ் பிதுரியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்,  தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு நடைமுறையில் உள்ள கல்வி, வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை அனைவரும் அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்.  சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி பறிக்கப்படுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!