18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கால்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பரிசு..

கீழக்கரையில் கால்பந்து போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு பரிசு..

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2023, 7:50 pm

இராமநாதபுரம், அக்.2- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சவுத் இஸ்லாமிக் நண்பர்கள், தெற்கு தெரு முஸ்லிம் பொது நலச்சங்கம் ஆகியன சார்பில் அர்ஷத் நினைவு கால்பந்து போட்டி ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

கீழக்கரை காவல் ஆய்வாளர் சரவணன் துவக்கி வைத்தார். கீழக்கரை வட்டாரத்தைச் சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றன. கீழக்கரை கால்பந்து கிளப் முதலிடம், சவுத் இஸ்லாமிக் நண்பர்கள் அணி 2 ஆம் இடம், தேரிருவேலி கேஎம் விஎஸ் 3 ஆம் இடம் பெரியபட்டினம் கால்பந்து கிளப் 4 இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகள், சிறந்த கோல் கீப்பர், சிறந்த வீரர்களுக்கு தொழிலதிபர்கள் அஹமது ரிபாய், சுலைமான், தெற்கு தெரு முஸ்லிம் பொதுநல சங்க தலைவர் நியாஸ் கான், கபார் கான் ஆகியோர் பதக்கம், பரிசு வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!