18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நரிப்பையூரில் பனை விதை நடவு: அமைச்சர் துவக்கி வைத்தார்…

நரிப்பையூரில் பனை விதை நடவு: அமைச்சர் துவக்கி வைத்தார்…

எழுதியவர்: ஆசிரியர் October 1, 2023, 8:25 pm

ராமநாதபுரம், அக்.1- ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் கடற்கரையில் பனை மர தொழிலாளர் நல வாரியம் மூலம் பனை விதைகள் நடவு பணி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன், நவாஸ் கனி எம்பி முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் 1 கோடி பனை விதை நடவு செய்து பாதுகாக்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் துவக்கி வைத்தார்.

இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் இத்திட்டம்இன்று  துவங்கப்பட்டுள்ளது. பனை மரங்களை பாதுகாக்கவும், புதிதாக பனை மரங்கள் வளர்க்கவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, தொழிலாளர் நல வாரிய அலுவலர் குணசேகரன், பனை நல வாரிய உறுப்பினர் கலாவதி, நரிப்பையூர் ஊராட்சி தலைவர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!