17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அருகே மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு கறவை மாடு வழங்கிய சங்க நிர்வாகிகள்..

சோழவந்தான் அருகே மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு கறவை மாடு வழங்கிய சங்க நிர்வாகிகள்..

எழுதியவர்: ஆசிரியர் October 1, 2023, 7:54 pm

சோழவந்தான் அக்.2

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையை சேர்ந்தவர் ரவி  இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு  மரணம் அடைந்தார். மரணம் அடைந்த ரவி செவன் ஸ்டார் அனைத்து வாகன ஓட்டுனர் வாழ்வுரிமை சங்கத்தில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மரணம் அடைந்த செய்தி கேட்ட சங்க நிர்வாகிகள் அவரது குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு சங்க நிர்வாகிகள் சார்பாக ஓட்டுனர் ரவியின் மனைவியிடம் கறவை மாடு மற்றும் மளிகை சாமான்கள் வழங்கினர் தங்களுடன் பணியாற்றிய நண்பரின் குடும்பத்திற்கு உதவி செய்த இந்த சம்பவம்நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன், ஓட்டுநர் சங்க மாநில தலைவர் பொன் சரவணன், மாநில செயலாளர் கிருஷ்ணகுமார், மாநில பொருளாளர் ரியாசுதீன் ,மாநில தலைமை பேச்சாளர் வீரமணி, துணைத் தலைவர்கள் மகேஸ்வரன், ரஜினி, துணைச் செயலாளர்கள் முருகேசன், சூரியதேவன், துணை பேச்சாளர்கள் ராமநாதகிருஷ்ணன், முருகேசன் ,துணை ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணதாசன், கார்த்திக் ,துணை ஆலோசகர் தங்கராஜ், மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!