18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் மேக்ஸிவிஷனின் புதிய கண் மருத்துவமனை திறப்பு விழா..

மதுரையில் மேக்ஸிவிஷனின் புதிய கண் மருத்துவமனை திறப்பு விழா..

எழுதியவர்: ஆசிரியர் October 1, 2023, 5:05 pm

மதுரை, கே.கே.நகரில் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை தென்மாவட்ட பிராந்திய இயக்குநர் மேக்ஸிவிஷன் மருத்துமனை டாக்டர் ராஜ்குமார் ,தமிழ்நாடு மற்றும் கேரளா. மேக்ஸிவிஷன் கண்மருத்துமனை திரு.பெல்லி.பாபு,  பிராந்திய மருத்துவ இயக்குநர் மதுரை டாக்டர்.ராஜ்குமார் யாதவ், பொது மேளாளர் தமிழ்நாடு மேகஸ்விஷன் கண் மருத்துவமனை பீட்டர் ஜெயராஜ் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.  இந்த விழாவில் இந்தியன் மெடிக்கல் அசோஸியேசன் தலைவர் டாக்டர் மகாலிங்கம், இந்தியன் மெடிக்கல் அசோஸியேசன் செயலாளர் டாக்டர் அழகு வெங்கடேசன், அப்பல்லோ மருத்துவமனை பொது மேலாளர் கர்பகவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் தொழிலதிபர்கள் சோலைகண்ணன், திருமாறன், சோலைஅழகு, முப்பை குருபாய், குவைத் குருசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கொண்டு பொதுமக்களோடு இணைந்து கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த விழாவில், மதுரை மேக்ஸிவிஷன் மருத்துவமணை மதுரை பிராந்திய இயக்குனர் டாக்டர் ராஜ்குமார், மற்றும் மதுரை மேக்ஸிவிஷன் கண் மருத்துமனை குழு டாக்டர் கரோலின், டாக்டர் ரத்னா மற்றும் டாக்டர் சுகப்பிரயா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துவக்க விழாவை முன்னிட்டு, இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!