18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம்..

கீழக்கரையில் இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் October 1, 2023, 4:58 pm

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக வாக்காளர் அட்டை பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் இன்று 01/10/2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

முகாமை சங்கத்தின் தலைவர் ஆலிம் முஹம்மது தவ்ஹீத் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ஜூல்ஃபி, காதர், ஃபஹத், சஃப்வான், சுஹைல், ரிதுவான் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலை 10:00 மணி முதல் மதியம் 02:30 மணி வரை நடைபெற்ற முகாமில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெற்றனர். முகாமின் ஒருங்கிணைப்பாளர் ஜூல்ஃபி கூறுகையில் புதிய வாக்காளர்களாக இணைய அதிகமான இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்ததாக தெரிவித்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!