18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வலையங்குளம் பகுதியில் சாலையை கடக்க முற்பட்ட டூவிலரை மோதிய கார்… CCTV காட்சிகள்..

மதுரை வலையங்குளம் பகுதியில் சாலையை கடக்க முற்பட்ட டூவிலரை மோதிய கார்… CCTV காட்சிகள்..

எழுதியவர்: ஆசிரியர் September 29, 2023, 2:25 pm

மதுரை வலையங்குளம் நெடுஞ்சாலை பகுதியில்  நெடுமதுரையை சேர்ந்த அருள்மணி (48) மற்றும் பெருங்குடியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் காசிநாதன் (70) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முற்பட்டுள்ளனர்.அப்போது எலியார்ப்பத்தி சுங்கச்சாவடியில் இருந்து அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டனர் இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் காரை ஓட்டி வந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில். தற்போது இந்த விபத்தின் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!