17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் September 29, 2023, 12:40 pm

வாடிப்பட்டி செப்29

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடிப்பட்டி தபால் அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ,குண்டு மலை முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் ஜீவானந்தம், மத்திய குழு உறுப்பினர் ராஜா என்ற ஆசீர்வாதம் சிறப்புரை ஆற்றினர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் செல்வகுமார், திருஞானம், ராஜபாண்டி அமுதப்பிரியன், ஜேம்ஸ் என்ற தங்கவேல் ,உலக ராஜா ,பாண்டி, கவிதா, மரியம்மாள், தனம் ,உள்ளிட்ட புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!