17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிட பணி.. சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார்..

வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிட பணி.. சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார்..

எழுதியவர்: ஆசிரியர் September 29, 2023, 12:36 pm

வாடிப்பட்டி செப் 29

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் பள்ளி மாணவர்கள் அடிக்கல் நாட்டினர். பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ்,  வார்டு கவுன்சிலர் ஜெயகாந்தன், இளைஞர் அணி வினோத் திரவியம்,பள்ளி தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா, உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் மற்றும் ஆசிரியர்கள், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரியா ,பள்ளி மேலாண்மை குழு தலைவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!