18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அருகே பாட்டி கொலை: பேரனிடம் விசாரணை..

கீழக்கரை அருகே பாட்டி கொலை: பேரனிடம் விசாரணை..

எழுதியவர்: ஆசிரியர் September 29, 2023, 12:26 pm

இராமநாதபுரம், செப்.29 – 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உப்பிலான்வலசை அண்ணா நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 32. குடி போதையில் நேற்று காலை வீடு திரும்பிய இவர், அவரது பாட்டி மாரியம்மாளிடம்(88) பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணமில்லை என மாரியம்மாள் கூறியுள்ளார். இதனால் மாரியம்மாளுடன் லட்சுமணன் வாக்குவாதம் செய்தார். அப்போது உடனிருந்த அவர்களது உறவக்கார பெண் ஒருவர் ஹலோ போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதன்படி கீழக்கரை போலீசார் அண்ணா நகருக்கு வந்தனர். அப்போது மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். வீட்டில் இருந்த டிவி உடைந்து, அதில் ரத்த தடயம் காணப்பட்டது. இதைதொடர்ந்து போலீசார் கைப்பற்றிய மாரியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, மாரியம்மாள் இறப்பிற்கான காரணம் குறித்து லட்சுமணனிடம் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!