17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்விக்கடன் கோரும் மாணாக்கரின் விண்ணப்பங்களை 100% ஏற்று கடனுதவி வழங்க வேண்டும்: கலெக்டர் பேச்சு..

கல்விக்கடன் கோரும் மாணாக்கரின் விண்ணப்பங்களை 100% ஏற்று கடனுதவி வழங்க வேண்டும்: கலெக்டர் பேச்சு..

எழுதியவர்: ஆசிரியர் September 28, 2023, 8:40 am

ராமநாதபுரம், செப்.28 ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான கடனுதவி, கல்விக் கடன் முகாம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு இணை தொழிலாக பல்வேறு குறு, சிறு தொழில்களை உருவாக்கி பொருளாதாரம் முன்னேற்றம் பெறும் வகையில் தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. கல்விக்கடன் கோரும் மாணவ, மாணவியரின் விண்ணப்பங்களை 100% ஏற்று கடன் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.

தொழில்முனைவோர்  26 பேருக்கு ரூ.5 கோடியே 11 லட்சத்து 28 ஆயிரத்து 600 கடன் உதவியை கலெக்டர் விஷ்ணு சந்திரன், வழங்கினார். மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் ஷர்மிளா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட தொழில் மைய பொறியாளர் பிரதீப், தாட்கோ மேலாளர் தியாகராஜன், தமிழ்நாடு தொழில் முதலீட்டாளர் கழக மேலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!