17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » சிவகாசியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பு வைத்திருந்த 3 பட்டாசு கடைகளுக்கு சீல் வைப்பு… 

சிவகாசியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பு வைத்திருந்த 3 பட்டாசு கடைகளுக்கு சீல் வைப்பு… 

எழுதியவர்: ஆசிரியர் September 27, 2023, 11:59 pm

சிவகாசி அருகே, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த, 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அய்யப்பன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் பட்டாசு விற்பனை கடை வைத்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசு விற்பனை கடையில், உரிமம் பெற்ற அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது. மேலும் பாறைப்பட்டி, திருப்பதி நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பட்டாசு விற்பனை கடையிலும், பட்டாசுகள் உரிமம் அளவை விட கூடுதலாக இருப்பு வைத்திருந்தது தெரிய வந்தது. மீனம்பட்டி, நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த லட்சுமணப்பெருமாள் (50) என்பவரின் பட்டாசு விற்பனை கடையிலும் அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்ததும் அதிகாரிகள் ஆய்வில் தெரிந்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த 3 பட்டாசு விற்பனை கடைகளுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் பட்டாசு விற்பனை கடை உரிமையாளர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!