17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வாடிபட்டியில் பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி..

மதுரை வாடிபட்டியில் பேரிடர் மேலாண்மை பணி செயல்முறை பயிற்சி..

எழுதியவர்: ஆசிரியர் September 27, 2023, 11:50 pm

வாடிப்பட்டி, செப்.27. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை சார்பாக , வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் தனியார் பஞ்சுஆலையில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் மீட்பு பணி பற்றிய மாதிரி செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

இந்த பயிற்சி முகாமிற்கு, நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமை தாங்கி பயிற்சியளித்தார்.

இதில், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் காலங்களில் உயிர்களை காப்பாற்ற எவ்வாறு நடந்து கொள்வது முறையான மற்றும் முறையற்ற மீட்பு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கி காண்பித்தனர்.

இதில், ஆலைத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!