17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பழைய குப்பைக்கிடங்கிற்கு பூட்டுப் போட்ட மக்களால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

உசிலம்பட்டியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பழைய குப்பைக்கிடங்கிற்கு பூட்டுப் போட்ட மக்களால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

எழுதியவர்: ஆசிரியர் September 27, 2023, 1:02 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆரம்பத்தில் தேனி ரோட்டிலுள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டன. மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இடத்தில் குப்பை கொட்டப்பட்டதாலும் அருகில் குடியிறுப்பு பகுதி இருப்பதாலும் அங்கே குப்பை கொட்ட எதிர்ப்பு கிளம்பியதால் பின்னர் உத்தப்பநாயக்கனூர் அருகே திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டது செயல்பட்டது. நாளடைவில் குப்பைகள் தரம் பிரிக்காமல் மொத்தமாக வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியிலும் குப்பைகளை கொட்ட கிராமமக்கள் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தால் அங்கேயும் குப்பைகள் கொட்டப்படவில்லை.

இந்நிலையில் நகராட்சிப்பகுதியில் சேரும் குப்பைகளை கொட்ட இடமில்லாததால்; கடந்த இரு நாட்களாக மீண்டும் தேனி ரோட்டிலுள்ள பழைய குப்பைக்கிடங்கில் கொட்டப் பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உசிலம்பட்டி நகராட்சி 1வது வார்டு பகுதி மக்கள் முன்னாள் கவுன்சிலர் நடுபப்பாண்டி தலைமையில் ஒன்று கூடி குப்பை கொட்டிவிட்டு நகராட்சி லாரி வெளியேறிய பின் குப்பைக்கிடங்கிற்கு பூட்டுப் போட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!