18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்…

உசிலம்பட்டியில் தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி முன்னாள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்…

எழுதியவர்: ஆசிரியர் September 27, 2023, 12:57 am

தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-12ம் வகுப்பு முடிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பு முடித்த பின் பின் ஊக்கத் தொகையாக ரூ5500 வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2019-21 ம்ஆண்டு 11-12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகின்றது.இதனைக் கண்டித்தும் அரசின் ஊக்கத்தொகை வழங்கக்கோரியும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.சம்பவமறிந்த போலிசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!