18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தனியார் மருத்துவமணை சார்பில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடைபெற்றது..

உசிலம்பட்டியில் தனியார் மருத்துவமணை சார்பில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் September 27, 2023, 12:54 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் இணைந்து உசிலம்பட்டி தேனி ரோட்டிபுள்ள தனியார் மண்டபத்தில் பெண்களின் நலன் கருதி இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆண் பெண் இருபாலருக்கும் குழந்தையின்மை பிரச்சனைகள் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் செயற்கை கருத்தரித்தல் விந்தணு விந்து பையில் இருந்து பிரித்தெடுத்தல் குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல் அதன் மூலம் குழந்தை பெற்று எடுத்ததில் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர். இம்முகாமில் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!