18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் ஐமுமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..

ராமநாதபுரத்தில் ஐமுமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் September 26, 2023, 9:09 am

இராமநாதபுரம், செப்.26 – இராமநாதபுரம் நகர் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்,  பெரிய முஹல்லா முஸ்லிம் ஜமாஅத்,  ஆரோக்யா மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.  ஐமுமுக மாவட்ட துணை செயலாளர்  யாசர் அரபாத்  தலைமை வகித்தார். பெரிய முஹல்லா ஜமாஅத் செயலாளர். குதரத்துல்லா  வரவேற்றார். பெரிய முஹல்லா ஜமாஅத் தலைவர்  ஹாரூன் ரசீது சின்ன முஹல்லா ஜமாஅத் தலைவர்  புர்கான்_அலி  பெரிய முஹல்லா ஜமாஅத் காசாளர்  சகாபுதீன்,பெரிய முஹல்லா ஜமாஅத் அப்துல் மாலிக்,  முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அயூப் கான், நகர் மன்ற உறுப்பினர்கள்  ஜெயராமன்,  ஜோதி புஷ்பம் நேதாஜி, ஐமுமுக மாவட்ட தலைவர்  சுல்தான், மாவட்ட துணை செயலாளர்கள்  பரக்கத்துல்லா, மன்சூர் அலி,  மருத்துவ சேவை அணி நகர் செயலர்  அல் அமீன் முன்னிலை வகித்தனர்.  ழகிரசன்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர்  லியாக்கத் அலி, ஐமுமுக மாநிலச் செயலாளர்  அன்வர் அலி, மாநில தொண்டர் அணி பொருளாளர். அஹமது இப்ராஹிம் துவங்கி வைத்தனர்.

ஆரோக்யா மருத்துவமனை டாக்டர் பரணிகுமார் தலைமையில்  96 பேருக்கு தைராய்டு, 112 பேருக்கு கண்,  36 பேருக்கு  காது, தொண்டை, 48 பேருக்கு பல்,  55 பேருக்கு  கால் நரம்பு,  319 பேருக்கு  பொது மருத்துவ பரிசோதனை என 646 பேருக்கு ஆலோசனை, மருந்து வழங்கப்பட்டது. .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!