17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் கணித செயல்பாடு குறித்து கல்வித்துறை இயக்குனர் முனைவர் ,க. அறிவொளி நேரடி ஆய்வு…

திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறன் கணித செயல்பாடு குறித்து கல்வித்துறை இயக்குனர் முனைவர் ,க. அறிவொளி நேரடி ஆய்வு…

எழுதியவர்: ஆசிரியர் September 26, 2023, 12:43 am

சிவகங்கை மாவட்டம்  திருமாஞ்சோலை, அரசு மேல்நிலைப் பள்ளியில்  25.09.2023 அன்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் முனைவர். க.அறிவொளி அவர்கள்  மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் கணித செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சிறப்பாக வாசித்த  மாணவர்களுக்கும் கணித செயல்பாடுகள்  செய்த மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசு தலா ரூபாய் 100 வழங்கி, பாராட்டினார். மேலும் பேனா வழங்கி மாணவர்களிடையே  உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களின் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்த்தும் விதமாக பேசி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் உடன் தொடக்கக்கல்வி துணை இயக்குநர் (சட்டம்) திரு .இரா.சுவாமிநாதன் இருந்தார்.திருமாஞ்சோலை அரசு பள்ளி தலைமையாசிரியர் பரிமளா தேவி மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்…

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!