17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் பெருங்குளம் அருகே விபத்து: 30 பேர் காயம்..

இராமநாதபுரம் பெருங்குளம் அருகே விபத்து: 30 பேர் காயம்..

எழுதியவர்: ஆசிரியர் September 25, 2023, 8:27 am

இராமநாதபுரம், செப்.25 – தஞ்சாவூர்- ராமேஸ்வரம் அரசு பேருந்து  ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்றிரவு 8:40 மணியளவில் கிளம்பியது. இரவு 9 மணியளவில் பெருங்குளம் அருகே வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 30 மேற்பட்ட பயணிகள் லேசான காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த பனைக்குளம் தமுமுக நிர்வாகி பரக்கத்துல்லா, தமுமுக மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லாஹ்கான் ஆகியோரின் ஆலோசனைப்படி  பனைக்குளம் நகர் நிர்வாகிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உச்சிப்புளி போலீசார் உதவியுடன் மீட்கப்பட்ட பயணிகள தமுமுக ஆம்புலன்ஸ்கள் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர் ஆனந்த் தலைமையில் முதலுதவி அளிக்கப்பட்டது.  மமக மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் பாபு, நகர் தலைவர் தாஜுதீன், மமக நகர் செயலாளர் அக்பர், முஜிப் ரஹ்மான் ஆகியோர் உதவினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!