18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முத்துச்சாமிபுரத்தில் சமுதாயக்கூடம் திறப்பு..

கீழக்கரை முத்துச்சாமிபுரத்தில் சமுதாயக்கூடம் திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் September 23, 2023, 8:49 pm

இராமநாதபுரம், செப்.23 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 5 வது வார்டு முத்துச்சாமிபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடத்தை திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ இன்று திறந்து வைத்தார். 

நகர்மன்ற தலைவர் எஸ்.செஹனாஸ் ஆபிதா, நகராட்சி ஆணையர் செல்வராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் வி.எஸ்.ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் சர்ஃப்ராஸ் நவாஸ், முஹமது ஹாஜா சுஐபு, நகராட்சி பொறியாளர் அருள், சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கே.ஆர்.டி கிருஷ்ணமூர்த்தி, ராமேஸ்வரம் நகராட்சி கவுன்சிலர் அர்ச்சுணன், நகர் திமுக செயலாளர் பஷீர் அஹமது உட்பட பலர் பங்கேற்றனர். கவுன்சிலர் காயத்ரி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!