18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் கரும்பு விவசாயிகளுக்கு கடன் உதவி: கலெக்டர் வழங்கினார்..

ராமநாதபுரம் கரும்பு விவசாயிகளுக்கு கடன் உதவி: கலெக்டர் வழங்கினார்..

எழுதியவர்: ஆசிரியர் September 23, 2023, 12:34 am

ராமநாதபுரம், செப்.22- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை அலுவலர்கள் எடுத்துரைத்தனர். வறட்சி நிவாரணமாக மாவட்டத்திற்கு வரப்பெற்ற ரூ.132 கோடி நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  வடகிழக்கு பருவமழையையொட்டி கண்மாய்களை தூர்வாருதல், கால்வாய்களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் வழியாக செல்லக்கூடிய தாழ்வான மின் கம்பங்களை சரி செய்யவும், சேதமான மின் கம்பங்களை சரி செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். செப்.19ல் நடந்த தென்னை, கரும்பு விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டு 3 விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடனாக ரூ.2.72,457/ஐ மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வேளாண்ம துறை இணை இயக்குநர்(பொ) தனுஷ்கோடி, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கல்யாணசுந்தரம் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!