17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் செப்.23 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

நெல்லையில் செப்.23 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்..

எழுதியவர்: ஆசிரியர் September 22, 2023, 9:15 pm

நெல்லையில் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.கா.ப. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் சேரன்மகாதேவி, பெரியார் அரசு மேல் நிலைப் பள்ளியில் காலை 10:00 மணி முதல் மதியம் 2.00 வரை 23.09.2023 அன்று நடைபெறவுள்ளது.

இம்முகாமில், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை- நகல், குடும்ப அட்டை – நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை – நகல் புகைப்படம்-5 ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுதிறனாளிகள் இம்முகாமில் பெறலாம் எனவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.கா.ப. கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!