17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியங்குடி காயிதே மில்லத் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டிகளை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ வழங்கினார்..

புளியங்குடி காயிதே மில்லத் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டிகளை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ வழங்கினார்..

எழுதியவர்: ஆசிரியர் September 22, 2023, 8:22 am

தென்காசி மாவட்டம் புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. வாசுதேவநல்லூர் எம்எல்ஏ டாக்டர். சதன் திருமலைக்குமார் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் பொறியாளர் பி.என் எம் மௌலல் கௌமி தலைமையில் நடந்தது. ஜமாஅத் கமிட்டி உதவி தலைவர் எ. சாகுல் ஹமீது, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் எம்.காலிதீன், எம். முகம்மது உசேன், முகம்மது முகைதீன் ஆலிம், இளைஞர் மன்றம் நிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சபூர் பாத்திமா அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியை சுபைதா பானு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் எஸ்.எம். சாகுல் ஹமீது, மதிமுக மாவட்ட பொருளாளர் எம். அலாவுதீன், உதவி தலைமை ஆசிரியை சகிலா பானு, மதிமுக நகரச் செயலாளர் ஜாஹிர் உசேன், மணிச்சுடர் சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் ஜமாஅத் கமிட்டி செயலாளர் ஏ. அபுதாகிர் நன்றி கூறினார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!