17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் நலிவுற்ற திமுக நிர்வாகிக்கு நிதியுதவி; தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழங்கினார்..

தென்காசி மாவட்டத்தில் நலிவுற்ற திமுக நிர்வாகிக்கு நிதியுதவி; தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழங்கினார்..

எழுதியவர்: ஆசிரியர் September 22, 2023, 12:05 am

தென்காசி மாவட்டத்தில் நலிவுற்ற திமுக நிர்வாகிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் ரூ. 10,000 நிதி உதவி வழங்கினார். தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி சக்தி. நலிவுற்ற நிலையில் உள்ள சக்தியின் குடும்பத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே. ஜெயபாலன் ரூபாய் 10,000 நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச் செல்வி போஸ், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் பொன் செல்வன், சுரண்டை ஆறுமுகசாமி, மாவட்ட அணி அமைப்பாளர் முத்து ராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!