17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நீதிமன்ற ஊழியர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை…

மதுரையில் நீதிமன்ற ஊழியர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை…

எழுதியவர்: ஆசிரியர் September 21, 2023, 12:20 am

மதுரை, செப். 21: நீதிமன்ற ஊழியர் பிளேடால் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து, எஸ்எஸ் காலனி போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை, எல்லீஸ் நகர், அப்துல்கலாம் 1வது தெருவைச் சேர்த்தவர் லட்சுமணன் (53). இவரது, மனைவி கபா. இவர்களுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர்.

லட்சுமணன் சிவகங்கை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். தேற்று மதியம், வீட்டின் அருகில் வசிக்கும் தனது அம்மா வீட்டிற்கு லட்சுமணன் சென்றுள்ளார். பின், நீண்ட நேரமாக விட்டில் உள்ள அறையில் இருந்து அவர்வெளியே வரவில்லை.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, லட்சுமணன் பிளேடால் கழுத்தறுத்து கொண்டு, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து, எஸ்எஸ் காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் விசாரணையில் வீட்டில் இருந்து லட்சுமணள் தற்கொலை செய்யும் முன் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும், மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!