இராமநாதபுரத்தில் வருவாய் துறையினர் கோரிக்கை பட்டை அணிந்து பணி…
எழுதியவர்: ஆசிரியர் September 20, 2023, 11:46 pm

இராமநாதபுரம், செப்.20- தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி
வருவாய் துறையினரின் கோரிக்கை பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் எஸ்.பழனிகுமார் கூறியதாவது:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகளுக்கு கூடுதல் பணியிடங்கள் உடனே வழங்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி கலெக்டரின் ஊழியர் விரோத போக்கு செயல்பாடுகளை விசாரித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறை அலுவலர்கள் மீது புனைந்த பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
அரசுடான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக அரசாணை உடனே வெளியிட வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள வருவாய் துறை அலுவலர்கள், பணியாளர்கள் பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகிறோம். கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை மாநில நிர்வாகிகளின் முடிவின் படி அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்றார்.



You must be logged in to post a comment.