17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைச்சர் உதயநிதி மதுரையில் பேட்டி..

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைச்சர் உதயநிதி மதுரையில் பேட்டி..

எழுதியவர்: ஆசிரியர் September 20, 2023, 9:16 am

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை. -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

*பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு:*

அது கொண்டு வருவது போல் தெரியவில்லை. புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை.

*காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு:*

சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேளுங்கள்.

*விஸ்வகர்மா திட்டம் குறித்த கேள்விக்கு:*

அதை எதிர்த்து இருக்கிறோம்.

*தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறியது குறித்த கேள்விக்கு:*

அதற்குத்தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் இருக்கக் கூடாது.

*சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்து விடுமா என்ற கேள்விக்கு:*

நான் நம்புகிறேன்; நீங்கள் நம்பவில்லையா; நம்புங்கள்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!