17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் காரின் டயர் வெடித்து விபத்து; உரிய நேரத்தில் உயிரை காப்பாற்றிய ஏர்பேக்..

மதுரையில் காரின் டயர் வெடித்து விபத்து; உரிய நேரத்தில் உயிரை காப்பாற்றிய ஏர்பேக்..

எழுதியவர்: ஆசிரியர் September 19, 2023, 8:45 pm

மதுரை ஆனையூர் பகுதியை  சேர்ந்த சத்யா (வயது 29) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்த பொழுது காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்ததில் சாலையில் இருந்த தடுப்புச் சுவற்றில் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

அச்சமயத்தில்  விபத்தின்போது காரில் இருந்த ஏர் பேக் உரிய நேரத்தில் வெளிவந்து காரை ஓட்டி வந்த சத்யாவை காப்பற்றியது. இதனால் சத்யா லேசான காயத்துடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தொடர்ந்து விபத்து சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை என்பதால் வாரச்சந்தை நடந்து கொண்டிருந்தது, ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்டு தடுப்பு சுவற்றில் மோதி வாகனம் நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!