17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரத்தில் புதிய ஆட்டோகளுக்கு பர்மிட் வழங்க எதிர்ப்பு: தொழிலாளர்கள் போராட்டம்..

ராமேஸ்வரத்தில் புதிய ஆட்டோகளுக்கு பர்மிட் வழங்க எதிர்ப்பு: தொழிலாளர்கள் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் September 19, 2023, 8:29 pm

இராமநாதபுரம், செப்.19- ராமேஸ்வரம் தீவிற்கு புதிய ஆட்டோ பர்மிட்கள் வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி அனைத்து ஆட்டோ சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி நிர்வாகி சி.ஆர். செந்தில் வேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்க ஏஐடியுசி மாவட்ட செயலாளர் எம்.செந்தில், மாவட்ட தலைவர் சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ஜீவானந்தம், தாலுகா செயலாளர் ஜி.பாண்டி, தாலுகா தலைவர் ஏ.கே முனிஸ்வரன், ஏஐடியுசி ஆட்டோ சங்க நிர்வாகிகள் வாசு, ஞானபிரகாசம் , முனியசாமி, நாகராஜன், நாம் தமிழர் ஆட்டோ சங்கம் சார்பில் ராசு, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் எம்.சிவாஜி என்.பி.செந்தில் , சாந்தகுமார், சந்தியா ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் மாரி, தேவர் சிலை ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகி வடிவேல் வேர்க்கோடு ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகி தர்மர், இந்து முன்னணி ஆட்டோ சங்கம் சார்பில் மணிகண்டன், அக்னி சிறகுகள் ஆட்டோ சங்கம் சார்பில் காளிராஜ், அக்னி தீர்த்தம் ஆட்டோ சங்க நிர்வாகி பாலா உட்பட 500க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறும் ராமேஸ்வரத்திற்கு புதிய ஆட்டோ பர்மிட்கள் வழங்கப்பட்டால் மேலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். சாலைகள் விரிவாக்க பணிகளை முதலில் அரசு நிர்வாகம் முடிக்க வேண்டும். வெளியூர் பர்மிட்கள் ராமேஸ்வரத்தில் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரனை சந்தித்து மனு அளித்தனர். ராமேஸ்வரத்திற்கு பர்மிட்டை நிறுத்துவதில் உறுதியான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.9.2023 அன்று குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு ஆட்டோ தொழிலாளர்கள் கூறினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!