17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீர் ரத்தால் பயணிகள் அவதி..

சென்னையில் இருந்து மதுரைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீர் ரத்தால் பயணிகள் அவதி..

எழுதியவர்: ஆசிரியர் September 18, 2023, 8:43 pm

சென்னையில் இருந்து பகல் 11:30 மணியளவில் மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட்  விமானம்  திடீரென ரத்து செய்யப்பட்டதால் மதுரை இருந்து செல்ல வேண்டிய பயணிகள் அவதி அடைந்தனர். மதுரையில் இருந்து சென்னை செல்ல 90 பேர் முன்பதிவு செய்து வைத்திருந்தனர்.

சென்னையிலிருந்து 11:30 மணிக்கு மதுரை வந்தடைந்து மதுரையிலிருந்து 12.05 மணிக்கு மீண்டும் சென்னை செல்லும். விமானம் திடீரென ரத்தானதால் இதனை தொடர்ந்து பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

இதனை அடுத்து அவசரமாக செல்ல வேண்டிய பயணிகளுக்கு கார் மூலம் அனுப்பி வைத்தனர் மிகவும் அவசரமாக செல்லும் பயணிகளுக்கு இண்டிகோ விமானத்தில் சென்னை பயணம் செய்யவும். மீதமுள்ள 37 பயணிகளுக்கு சென்னை செல்வதற்காக அடுத்த விமானத்தில் தயார் செய்து வருகின்றனர். 

ஸ்பைஸ் ஜெட் விமானம் திடீரென ரத்தனதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாய்னர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!